திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

ஆண்டின் இறுதியில் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
Published on

திருவட்டார், 

ஆண்டின் இறுதியில் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

அருவியில் உற்சாக குளியல்

2022-ம் ஆண்டின் இறுதி நாளான நேற்று திற்பரப்பு அருவிக்கு ஏராளமானோர் படையெடுத்தனர். காலை முதலே கார், வேன், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வந்த அவர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

பின்னர் குழந்தைகளுடன் நீச்சல் குளத்திலும் குளித்து குதூகலம் அடைந்தனர். தொடர்ந்து அருவியின் அருகில் உள்ள சிறுவர் பூங்கா, அலங்கார நீரூற்று, பச்சை பசேலென புல்வெளி தோட்டம் ஆகியவற்றை பார்த்து ரசித்தனர்.

படகு சவாரி

மேலும் அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பணைக்கு சென்று படகு சவாரி மேற்கொண்டனர். அப்போது சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

திற்பரப்புக்கு ஏராளமான வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல் மாத்தூர் தொட்டிப்பாலம், பேச்சிப்பாறை அணைக்கட்டு ஆகிய சுற்றுலா தலங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு உற்சாகமாக பொழுதை கழித்தனர்

X

Daily Thanthi
www.dailythanthi.com