கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்: மலைச்சாலையில் போக்குவரத்து நெரிசல்

வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்: மலைச்சாலையில் போக்குவரத்து நெரிசல்
Published on

தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக உள்ளது. இந்நிலையில் பள்ளி, கல்லூரி தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது, மேலும் வெப்பத்தை சமாளிப்பதற்காக கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மாலை முதல் அதிகாலை வரை நிலவும் இதமான பருவநிலையை அனுபவிப்பதற்காக, சுற்றுலாப்பயணிகள் வருகையானது நேற்று காலை முதல் அதிகரித்துள்ளது.

இதனால், கொடைக்கானல் செல்லும் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மாலைச்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுற்றுலா பயணிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com