வார விடுமுறையையொட்டி முதுமலை யானைகள் முகாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வார விடுமுறையையொட்டி முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
வார விடுமுறையையொட்டி முதுமலை யானைகள் முகாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Published on

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள முதுமலையில் தெப்பக்காடு யானைகள் முகாம் அமைந்துள்ளது. இங்கு 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், இங்குள்ள யானைகளுக்கு காலை-மாலை என இருவேளைகளிலும் ஊட்டச்சத்து உணவு வழங்குவது வழக்கம். யானைகள் அணிவகுத்து நின்று உணவு உட்கொள்வதை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் வார விடுமுறையை முன்னிட்டு முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்கு ஒவ்வொரு யானைக்கும் அதன் பாகன்கள் ஊட்டச்சத்து உணவுகளை வழங்குவதையும், யானைகள் செய்யும் குறும்புகளையும் சுற்றுலா பயணிகள் கூடி நின்று உற்சாகத்துடன் கண்டு களித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com