

திருப்பூர்,
திருப்பூர்-ஈரோடு ரெயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள ஊத்துக்குளி ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணிகளை எளிதாக்கும் வகையில், குறிப்பிட்ட ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, எர்ணாகுளம்-டாடாநகர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.18190) நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை). வருகிற 16, 19 மற்றும் 20-ந்தேதிகளில் எர் ணாகுளத்தில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு வழியில் 55 நிமிடங்கள் நிறுத்தப்படும்.
ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் (13352) நாளை மறுநாள், வருகிற 16, 19 மற்றும் 20-ந்தேதிகளில் ஆலப்புழாவில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு வழியில் 35 நிமிடங்கள் நிறுத்தப்படும். மேற் கண்ட தகவலை ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.