தண்டவாள பராமரிப்பு பணி: சேலம்-மயிலாடுதுறை ரெயில் இயக்கத்தில் மாற்றம்

இந்த ரெயில் கரூர் ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு மயிலாடுதுறை ரெயில் நிலையம் வரை மட்டுமே செல்லும்.
ரெயில்
Published on

சூரமங்கலம்,

கரூர் ரெயில்வே யார்டில் தண்டவாள புதுப்பிக்கும் மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி சில ரெயில்கள் சேவையில் நாளை (வியாழக்கிழமை) மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மயிலாடுதுறை-சேலம் எக்ஸ்பிரஸ்

அதன்படி மயிலாடுதுறையில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை-சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் மயிலாடுதுறை வீரராக்கியம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரெயில் வீரராக்கியத்தில் இருந்து சேலம் வரை இயக்கப்பட மாட்டாது.

மேலும் நாளை சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்திலிருந்து மதியம் 2.05 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில் கரூர் ரெயில் நிலையத்திலிருந்து மதியம் 3.40 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் சேலம் முதல் கரூர் வரை செல்லாது. இந்த ரெயில் கரூர் ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு மயிலாடுதுறை ரெயில் நிலையம் வரை மட்டுமே செல்லும் என சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com