டிராக்டர்-மோட்டார் சைக்கிள் மோதல்;தந்தை, மகள் படுகாயம்

நெகமம் அருகே டிராக்டர்-மோட்டார் சைக்கிள் மோதியதில் தந்தை, மகள் படுகாயம் அடைந்தனர்.
டிராக்டர்-மோட்டார் சைக்கிள் மோதல்;தந்தை, மகள் படுகாயம்
Published on

நெகமம்

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் சின்னையன் (வயது 49). இவருடைய மகள் சிவரஞ்சினி (15). சம்பவத்தன்று சின்னையன் தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். நெகமம் காட்டம்பட்டி அருகே, செஞ்சேரிமலை பிரிவு பகுதியில் வந்தபோது, முன்னால் சென்ற டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் சின்னையன் மற்றும் அவரது மகள் சிவரஞ்சினி ஆகியோர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com