செம்மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்

செம்மண் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
செம்மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்
Published on

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவிலூர் கிராமத்தில் சட்டவிரோதமாக செம்மண் அள்ளப்படுவதாக திருமானூர் போலீசாருக்கு, கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் புகார் அளித்தார்.இது குறித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு டிராக்டர் டிப்பரில் செம்மண் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து, டிரைவரான பெரம்பலூர் மாவட்டம், பெரியபாளையம் கிராமத்தை சேர்ந்த மேகநாதன்(வயது 38) என்பவரை கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com