அனுமதியின்றி கடையில் பட்டாசுகள் விற்ற வியாபாரி கைது

பொதட்டூர்பேட்டை அருகே அனுமதியின்றி கடையில் பட்டாசுகள் விற்ற வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
அனுமதியின்றி கடையில் பட்டாசுகள் விற்ற வியாபாரி கைது
Published on

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை அருகே அத்திமாஞ்சேரி பேட்டையில் உள்ள பஜார் தெருவில் வசித்து வருபவர் துளசி நரசிம்முலு (வயது 50). இவரது கடையில் அனுமதி இல்லாமல் பட்டாசுகள் இருப்பு வைத்திருந்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் போலீசார் அந்த கடையில் சென்று திடீர் சோதனை செய்தனர். அப்போது கடையில் எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசு பெட்டிகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. போலீசார் அந்த பட்டாசுகளை பறிமுதல் செய்து வியாபாரி துளசி நரசிம்முலுவை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com