வியாபாரி தீக்குளித்து தற்கொலை;காப்பாற்ற முயன்ற மனைவி படுகாயம்

கணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். காப்பாற்ற சென்ற மனைவியும் படுகாயம் அடைந்தார்.
வியாபாரி தீக்குளித்து தற்கொலை;காப்பாற்ற முயன்ற மனைவி படுகாயம்
Published on

தேவகோட்டை,

கணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். காப்பாற்ற சென்ற மனைவியும் படுகாயம் அடைந்தார்.

தீக்குளித்து தற்கொலை

சிவகங்க மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கல்லூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 60). மர வியாபாரி. இவரது மனைவி ராஜேஸ்வரி (52).

கண்ணன் நேற்று மாலை தேவகோட்டைக்கு வந்துவிட்டு இரவு கல்லூரணி கிராமத்திற்கு சென்றார். வீட்டில் அவருக்கும், மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது கண்ணன் திடீரென மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார். உடனே கணவரை காப்பாற்ற முயன்ற அவரது மனைவி ராஜேசுவரியும் தீயில் சிக்கி படுகாயம் அடைந்தார். ஆனால், கண்ணன் பரிதாபமாக இறந்தார்.

சிகிச்சை

இதுகுறித்து அறிந்ததும் வேலாயுதப்பட்டினம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கண்ணன் உடலை பரிசோதனைக்கு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த அவரது மனைவியும் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com