அரசு ஊழியர்களுக்கு மரபு ஆடை: ஆலோசனையை கைவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

மாநிலத்திற்குள்ளேயே மரபு உடை என்பது வேறுபட்டதாகவும் இருக்கிறது என்று பெ. சண்முகம் தெரிவித்தார்.
 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகம்
பெ. சண்முகம்
Published on: 

சென்னை,

அரசு ஊழியர்களுக்கு மரபு ஆடை அணிவது குறித்த தமிழ்நாடு அரசின் ஆலோசனையை கைவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல். இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பொருத்தமற்ற நடவடிக்கை

தமிழ்நாடு தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வாரத்தில் ஒரு நாள் அரசு ஊழியர்கள் மரபு உடை அணிந்து அலுவலகத்திற்கு வர வேண்டுமென அரசாணை வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார். இது முற்றிலும் பொருத்தமற்ற நடவடிக்கை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

தவறான முறை

மாநிலத்திற்குள்ளேயே மரபு உடை என்பது வேறுபட்டதாகவும் இருக்கிறது. தங்களுடைய மரபு உடையை ஒவ்வொருவரும் அணிந்து வருவது என்பது தேவையற்ற விவாதங்களை எழுப்பும், கேள்விக்குள்ளாக்கப்படும். இத்தகைய ஆடை குறித்த வழிகாட்டுதல்கள் நிகழ்கால சமூக சூழலில் தவறான முறையில் விரிவாக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

வலியுறுத்தல்

இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு அமைச்சர் அந்த ஆலோசனையை கைவிட வேண்டுமென தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X