திருப்பதியில் போக்குவரத்து போலீசார் தீவிர சோதனை: 13 பேருக்கு அபராதம்

குடிபோதையில் வாகனம் ஒட்டினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
அபராதம்
Published on: 

திருப்பதி,

திருப்பதி நகரில் சாலை விபத்துகளை குறைத்து. சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்பாராயுடு உத்தரவின்பேரில் போக்குவரத்துப் பிரிவு போலீசார் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அபராதம்

அப்போது மதுபானம் குடித்து விட்டு போதையில் வாகனம் ஓட்டிய 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு. அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களிடம் விசாரித்த திருப்பதி முதலாம் சிறப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி தனலட்சுமி 13 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் சாலை விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாக தெரிவித்த போலீசார், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும், குடிபோதையில் வாகனம் ஒட்டினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com