சென்னையில் கார் மோதி போக்குவரத்து காவலர் உயிரிழப்பு

சென்னையில் கார் மோதி போக்குவரத்து காவலர் உயிரிழந்தார்.
சென்னையில் கார் மோதி போக்குவரத்து காவலர் உயிரிழப்பு
Published on

சென்னை,

சென்னை பள்ளிகரணை அருகே வாகனத் தணிக்கையின் போது கார் மோதியதில் போக்குவரத்து முதன்மை காவலர் மேகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மடிப்பாக்கத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அதிவேகமாக வந்த காரை அவர் மறித்துள்ளார். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றுள்ளது.

இதனால் அந்த காரை மேகநாதன் தனது இருசக்கர வாகனத்தில் துரத்தி சென்றுள்ளார். அப்போது சாய்ராம் என்பவர் ஓட்டிய கார் பைக் மீது மோதி மேகநாதன் இழுத்துச் செல்லப்பட்டார். இதனையடுத்து காவலர் மேகநாதன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து காவலர் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் மதுபோதையில் இருந்த சாய்ராம் என்பவரை போலீசார் கைது செய்தனர். விபத்து தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com