சாலையை கடக்கும் போது உடம்பில் உரசிய மின்வயர்.. திருநங்கைக்கு நேர்ந்த சோகம்

அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சாலையை கடக்கும் போது உடம்பில் உரசிய மின்வயர்.. திருநங்கைக்கு நேர்ந்த சோகம்
Published on

சென்னை,

பாரிமுனை அரண்மனைக்காரன் தெரு பகுதியைச் சேர்ந்த திருநங்கை புஷ்பராஜ் (50). இவர் புதன்கிழமை கடற்கரை சாலையை நடந்து சென்று கொண்டிருந்தபோது சாலையை கடக்கும் போது அங்கு இருந்த சாலைத் தடுப்பில் இருந்த மின் கம்பத்தின் மின் இணைப்புப் பெட்டியின் மின்வயர் புஷ்பராஜின் உடம்பின்மேல் பட்டது. அந்தப் பெட்டியில் மின் கசிவு ஏற்பட்டததில் புஷ்பராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில், பலத்த காயமடைந்து மயங்கிக் கிடந்த புஷ்பராஜை அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் புஷ்பராஜ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com