சாமி தரிசனத்துக்கு சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்... சதுரகிரியில் மூச்சுத்திணறி உயிரிழப்பு

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சென்ற இளைஞர் ஒருவர், மலையேறும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

மதுரை,

ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சென்ற இளைஞர் ஒருவர், மலையேறும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாமி தரிசனத்திற்காக சென்ற இளைஞர்

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள மேலதிருமாணிக்கத்தை சேர்ந்தவர் சிவகுமார் (33). ஜேசிபி ஆபரேட்டராக வேலை செய்து வந்த இவர், ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு சாமி தரிசனம் செய்வதற்காக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது சதுரகிரி மலையேறும் போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிவகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு

இதையடுத்து சிவகுமாரின் உடல் டோலி மூலம் தாணிப்பாறை மலைப்பாதை வழியாக அடிவாரத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com