மெழுகுவர்த்தி ஏற்றியபோது பரிதாபம்: சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உடல் கருகி சாவு

மெழுகுவர்த்தி ஏற்றியபோது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உடல் கருகி இறந்தார்.
மெழுகுவர்த்தி ஏற்றியபோது பரிதாபம்: சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உடல் கருகி சாவு
Published on

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் புதுத்தெருவை சேர்ந்தவர் பூபதி (வயது 68). இவர் கடந்த மாதம் 27-ந் தேதி இரவு வீட்டில் மின்சாரம் இல்லாதபோது மெழுகுவர்த்தி ஏற்றியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பிடித்தது. இதில் உடல் கருகிய மூதாட்டியை அப்பகுதி மக்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மூதாட்டி பூபதி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com