மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி வகுப்பு; ரிப்பன் கட்டிட அலுவலகத்தில் நடந்தது

இந்த பயிற்சி வகுப்புகள் 3 நாட்கள் நடைபெற இருக்கிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி வகுப்பு; ரிப்பன் கட்டிட அலுவலகத்தில் நடந்தது
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகை கூட்டரங்கில் நேற்று சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு 2027-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ் நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரகத்தின் இயக்குனர் சுந்தரேஷ் பாபு தலைமை தாங்கினார். சென்னை மாநகராட்சி கமிஷனர் சமீரன் முன்னிலை வகித்தார்.

இந்த பயிற்சி வகுப்புகள் 3 நாட்கள் நடைபெற இருக்கிறது. முதல் நாளான நேற்று தமிழ்நாடு மக்கள் தொகை கணக் கெடுப்பு இயக்குனரகத்தால் நியமிக்கப்பட்ட முதன்மை பயிற்சியாளர்கள் மூலம் சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்கள். மாநகர வருவாய் அலுவலர்கள், கூடுதல் வருவாய் அலுவலர்கள், முதுநிலை வருவாய் அலுவலர்கள், உதவி கமிஷனர்கள், மூத்த வருவாய் அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி வழங்கும் களப்பயிற்சியாளர்களுக்கும் தனிப்பட்ட பயிற்சி வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com