நெல்லை மாநகர ஊர்க்காவல் படையினருக்கு பயிற்சி: துணை கமிஷனர் அறிவுரை


நெல்லை மாநகர ஊர்க்காவல் படையினருக்கு பயிற்சி: துணை கமிஷனர் அறிவுரை
x

நெல்லை மாநகர காவல் துறையில் 60 ஆண்கள், 5 பெண்கள் என மொத்தம் 65 பேர் ஊர் காவல் படைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின்படி, திருநெல்வேலி மாநகர காவல் துறையில் 60 ஆண்கள், 5 பெண்கள் என மொத்தம் 65 பேர் ஊர் காவல் படைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வைத்து கடந்த 21ம் தேதி முதல் ெதாடங்கி 45 நாட்கள் அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (தலைமையிடம்) விஜயகுமார் நேற்று ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற பயிற்சியை நேரில் பார்வையிட்டு, பயிற்சியில் இருப்பவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

1 More update

Next Story