சத்தியமங்கலத்தில் கட்டப்பட்டு வரும் பழங்குடியினர் அருங்காட்சியகம் - அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு

பழங்குடியின மக்களுக்கு வனத்துறை சார்பில் கடன் உதவிகளை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்.
சத்தியமங்கலத்தில் கட்டப்பட்டு வரும் பழங்குடியினர் அருங்காட்சியகம் - அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு
Published on

ஈரோடு,

சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் கட்டப்பட்டு வரும் பழங்குடியினர் அருங்காட்சியகத்தை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பழங்குடியின மக்களுக்கு வனத்துறை சார்பில் கடன் உதவிகளை அவர் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பழங்குடியினர் அருங்காட்சியக பணிகளை முடிக்க மேலும் 2 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும், அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். வனப்பகுதியில் உள்ள அன்னிய மரங்களை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com