திருச்சி: ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 16 பவுன் நகைகள் அபேஸ்

வடமதுரை பஸ் நிறுத்தத்தில் இறங்கிய 3 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி: ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 16 பவுன் நகைகள் அபேஸ்
Published on: 

திருச்சி,

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 16 பவுன் நகைகளை அபேஸ் செய்த பெண்களை போலீஸ் தேடி வருகின்றனர்.

16 பவுன் நகை

திருச்சி கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 52). தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுரேகா. சம்பவத்தன்று இவர் தனது சகோதரரை பார்ப்பதற்காக தேனி மாவட்டம் கம்பம் செல்வதற்காக மன்னார்புரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் பஸ்சில் ஏறி சென்றார்.

அப்போது வையம்பட்டி அருகே பஸ் நின்றபோது, 3 பெண்கள் ஏறினர். அந்த 3 பெண்களும், சுரேகாவின் அருகிலேயே நின்று கொண்டிருந்தனர். அப்போது அதில் ஒரு பெண் சில்லரையை கீழே போட்டுவிட்டு சுரேகாவின் கவனத்தை திசை திருப்பி, அவர் பையில் வைத்திருந்த 16 பவுன் நகையை அபேஸ் செய்தார். இதை சுரேகா கவனிக்கவில்லை. அந்த பெண்கள் வடமதுரை சென்றதும் பஸ்சில் இருந்து இறங்கி சென்றுவிட்டனர்.

3 பெண்களுக்கு வலைவீச்சு

இந்த நிலையில் சுரேகா திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இறங்கி குமுளி பஸ்சில் ஏறி சகோதரர் வீட்டுக்கு சென்றார். அங்கு தற்செயலாக அவர் பையை பார்த்த போது. 16 பவுன் நகை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போதுதான் தன் அருகே 3 பெண்கள் நின்று இருந்தது சுரேகாவுக்கு நினைவுக்கு வந்தது. தனது கவனத்தை திசைதிருப்பி நகையை அபேஸ் செய்து இருக்க லாம் என சந்தேகப்பட்டு சுரேகா, கணவர் ரமேசுக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து ரமேஷ் கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த வழக்கை கம்பம் போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர். இந்த வழக்கு தொடர்பாக கம்பம் போலீசார் விசாரணை நடத்தி வடமதுரை பஸ் நிறுத்தத்தில் இறங்கிய 3 பெண்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

X