

திருச்சி,
பஸ்சில் பெண்ணிடம் நகை திருடிச்சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியை அடுத்த திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி அன்புச்செல்வி(வயது 54). சம்பவத்தன்று இவர் சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து சோமரசம்பேட்டை நோக்கி பஸ்சில் சென்று கொண்டிருந்தார். சோமரசம்பேட்டை பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து இறங்கிய அன்புச்செல்வி தனது கையில் வைத்திருந்த பையை பார்த்துள்ளார்.
அப்போது அதில் இருந்த 2½ பவுன் சங்கிலி, வெள்ளி நகை, மற்றும் அடையாள அட்டை ஆகியவை திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை உள்ளிட்டவற்றை திருடிச்சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.