திருச்சி: ஓடும் பஸ்சில் முதியவரிடம் 4 பவுன் நகை பறிப்பு

மர்ம நபர்கள் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சங்கிலியை திருடி சென்றுவிட்டனர்.
திருச்சி: ஓடும் பஸ்சில் முதியவரிடம் 4 பவுன் நகை பறிப்பு
Published on

திருச்சி,

பெரம்பலூர் அரசறை அறிஞர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (65). இவர் சம்பவத்தன்று மதியம் தனியார் டவுன் பஸ்சில் சீனிவாசநகரில் இருந்து சத்திரம் பஸ் நிலையத்திற்கு வந்தார்.

பஸ் நிலையத்தில் இறங்கிய போது அவரது பையில் இருந்த 4 பவுன் எடை கொண்ட 2 தங்க சங்கிலியை காணவில்லை. மர்ம நபர்கள் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சங்கிலியை திருடி சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com