தனிப்போக்குவரத்து கோட்டம் இல்லாத ஒரே நகரம் திருச்சி : துரை வைகோ கோரிக்கை

சங்க பணிகளை மேற்கொள்ள அலுவலகம் ஒதுக்கீடு செய்து தருமாறு இரண்டாவது கோரிக்கையையும் வழங்கினேன் என துரை வைகோ தெரிவித்தார்.
துரை வைகோ,விஜய் தமிழன் பார்த்திபன்
Published on

சென்னை,

மறுமலர்ச்சி திமுக எம்.பி. துரை வைகோ வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

இன்று தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் சந்தித்து, திருச்சியை தலைமையிடமாக கொண்டு தனி போக்குவரத்து கோட்டம் உருவாக்க வேண்டும் எனும் முக்கிய கோரிக்கை மனுவை வழங்கினேன்.

தனிப்போக்குவரத்து கோட்டம்

திருச்சி மாவட்டம் தற்போது கும்பகோணம் போக்குவரத்து கோட்டத்தின் கீழ் செயல்பட்டு வருவதால், 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட இந்த முக்கிய வணிக, கல்வி, சுகாதார மற்றும் சுற்றுலா மையத்தின் பொது போக்குவரத்து தேவைகள் நிறைவேற்றப்படுவதில் கணிசமான தாமதங்கள் ஏற்படுகின்றன.

தமிழ்நாட்டில் 10 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட மாநகரங்களில், தனிப்போக்குவரத்து கோட்டம் இல்லாத ஒரே நகரம் திருச்சி மட்டுமே என்பதை சுட்டிக்காட்டினேன்.

இரண்டாவது கோரிக்கை

இந்த கோரிக்கையை ஏற்கெனவே முதல்-அமைச்சரிமும் முந்தைய அமைச்சரிடமும் வலியுறுத்தியுள்ளதையும் தெரிவித்தேன். மேலும், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் போக்குவரத்து தொழிற்சங்கத்திற்கு அனைத்து கோட்ட அலுவலகங்களிலும் சங்க பணிகளை மேற்கொள்ள அலுவலகம் ஒதுக்கீடு செய்து தருமாறு இரண்டாவது கோரிக்கையையும் வழங்கினேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com