திருச்சி: மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு போட்டி: காளைகள் முட்டி 21 பேர் காயம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பொத்தமேட்டுப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
திருச்சி: மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு போட்டி: காளைகள் முட்டி 21 பேர் காயம்
Published on

திருச்சி,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் புனித அந்தோணியார் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.ர்.

இதில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் தங்க நாணயம், பீரோ, கட்டில், சைக்கிள், அண்டா உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது. காலை 9.20 மணிக்கு தொடங்கிய போட்டி மாலை 4.50 மணிக்கு நிறைவு பெற்றது. இந்த ஜல்லிக்கட்டில் 625 காளைகள் களம் கண்டன. 256 வீரர்கள் பங்கேற்றனர். காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள், மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள் என மொத்தம் 21 பேர் காயமடைந்தனர்.

அவர்களுக்கு அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 பேர் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டை ஏராளமானோர் கண்டு களித்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com