மதுராந்தகம் அருகே மதுபாட்டில்கள் ஏற்றிச்சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

மதுராந்தகம் அருகே மதுபாட்டில்கள் ஏற்றிச்சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மதுராந்தகம் அருகே மதுபாட்டில்கள் ஏற்றிச்சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
Published on

திருவள்ளூரில் இருந்து விழுப்புரம் நோக்கி மது பாட்டில்களை ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த பாக்கம் என்ற இடத்தில் செல்லும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் லாரியில் இருந்த மது பாட்டில்கள் பள்ளத்தில் சரிந்தன. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் மது பாட்டில்களை போட்டிபோட்டு அள்ளிச்சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் போலீசார், பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த லாரியை அப்புறப்படுத்தினர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com