லாரிகள் மோதி டிரைவர் பலி

விழுப்புரம் அருகே லாரிகள் மோதியதில் டிரைவா உயிழந்தா.
லாரிகள் மோதி டிரைவர் பலி
Published on

சென்னை ஆவடி பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் மகன் ஆரோன் (வயது 38), மினி லாரி டிரைவரான இவர், கும்பகோணத்தில் இருந்து சென்னை மார்க்கமாக மினி லாரியை ஓட்டிக்கொண்டு சென்றார். விழுப்புரத்தை அடுத்த சின்னக்கள்ளிப்பட்டு மேம்பாலம் அருகே சென்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி, அந்த மினி லாரியின் மீது மோதியது. இந்த விபத்தில் ஆரோன் பலத்த காயமடைந்தார். விபத்து குறித்த தகவல் அறிந்ததும் வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த ஆரோனை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே ஆரோன் இறந்துவிட்டதாக கூறினார். இந்த விபத்து தொடர்பாக டிப்பர் லாரி டிரைவரான கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுகா மருங்கூர் பகுதியை சேர்ந்த இளவரசன் (31) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com