மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; பெயிண்டர் பலி

திருவண்ணாமலையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் பெயிண்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; பெயிண்டர் பலி
Published on

திருவண்ணாமலை தென்மாத்தூர் சு.கீழ்நாச்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 47), பெயிண்டர். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஏழுமலை, அதே பகுதியை சேர்ந்த அவரது அக்காள் மகன் தேசிங்கு என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருக்கோவிலூர் சாலையில் மேலத்திக்கான் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த லாரி ஏழுமலை ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஏழுமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தேசிங்கு பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினார்.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தேசிங்கை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஏழுமலையின் மனைவி கவிதா கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com