கும்மிடிப்பூண்டி அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்; 3 சிறுவர்கள் படுகாயம்

கும்மிடிப்பூண்டி அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதலில் 3 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர்.
கும்மிடிப்பூண்டி அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்; 3 சிறுவர்கள் படுகாயம்
Published on

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள கீழ்முதலம்பேடு கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜசேகர் (வயது 18), யுகேந்திரன் (18), டேவிட் (18). நண்பர்களான 3 பேரும் நேற்று காலை கவரைப்பேட்டையில் இருந்து தச்சூர் நோக்கி ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை டேவிட் ஓட்டி சென்றார்.புதுவாயல் அருகே புதுரோடு சந்திப்பில் உள்ள சர்வீஸ் சாலையில் மோட்டார் சைக்கிள் செல்லும்போது, தொழிற்சாலை ஒன்றில் இருந்து வெளியே வந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது.

இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற 3 சிறுவர்களும் படுகாயம் அடைந்தனர். தற்போது 3 பேரும் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com