குன்றத்தூர் அருகே லாரி கவிழ்ந்து விபத்து

குன்றத்தூர் அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
குன்றத்தூர் அருகே லாரி கவிழ்ந்து விபத்து
Published on

பூந்தமல்லியில் இருந்து கலவை ஏற்றி கொண்டு லாரி ஒன்று தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, திருமுடிவாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென சாலையின் நடுவில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அங்கு காயம் அடைந்து கிடந்த டிரைவரை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த போலீசார் இரண்டு கிரேன்கள் மூலம் சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியை அப்புறப்படுத்தினார்கள். அந்த வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்காமல் சர்வீஸ் சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com