சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து - டிரைவர் காயம்

வேடசந்தூர் அருகே சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் காயம் அடைந்தார்.
சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து - டிரைவர் காயம்
Published on

வேடசந்தூர்,

திண்டுக்கலில் இருந்து கோயம்புத்தூருக்கு விறகு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.லாரியை அய்யம்பாளையத்தைச் சேர்ந்த கண்ணன்(வயது 45) என்பவர் ஓட்டி வந்தார்.

நேற்று நள்ளிரவு 1 மணிக்கு வேடசந்தூர் - ஒட்டன்சத்திரம் சாலையில் சித்தமரம் நால் ரோட்டை கடந்து வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் டிரைவர் கண்ணன் பலத்த காயம் அடைந்தார்.அவ்வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த வேடசந்தூர் போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com