

சென்னை,
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், த.வெ.க. சார்பில் சென்னை திரு.வி.க.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், பல்லவி. தேர்தல் பிரசாரத்தின்போதே கர்ப்பமாக இருந்த அவர், தொகுதி முழுவதும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதன்பின்னர், அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு, தனது குழந்தைக்கு டிவிகே என பெயர் வைக்கப்போவதாக பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில், சட்டசபை கூட்டத்தின் முதல் நாளான இன்று (வியாழக்கிழமை) கைக்குழந்தையுடன் சட்டசபைக்கு வந்த பல்லவி, வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு, பெண் எம்.எல்.ஏ.க்களுக்கான அறையில் சிறிது நேரம் இருந்தார். அப்போது, அங்கு வந்த பெண் எம்.எல்.ஏ.க்கள் சிலர் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தனர். பின்னர், குழந்தையுடன் பல்லவி புறப்பட்டு சென்றார்.