த.வெ.க. தலைவர் விஜய் விருந்து : குடும்பத்துடன் அழைத்து வரப்பட்ட விவசாயிகள்


த.வெ.க. தலைவர் விஜய் விருந்து : குடும்பத்துடன் அழைத்து வரப்பட்ட விவசாயிகள்
x

கோப்புப்படம்

மாநாட்டிற்கு நிலம் வழங்கிய நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு தமிழகவெற்றிக் கழகத் தலைவர் விஜய் விருந்து அளிக்கிறார்.

சென்னை,

கடந்த அக்டோபர் 27-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள், ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய் தனது கட்சி கொள்கை மற்றும் அரசியல் நிலவரம் என பல்வேறு கருத்துக்களை கூறினார்.

இந்த மாநாட்டிற்கு வி.சாலை பகுதியில் சுமார் 170 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் விவசாய நிலங்களும் அடங்கும். அதனை மாநாட்டிற்கு பயன்படுத்திவிட்டு மீண்டும் விவசாய பயன்பாட்டிற்கு ஏற்றாற்போல ஏற்பாடு செய்து கொடுப்ப்பதாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அண்மையில், நிலம் வழங்கிய அப்பகுதி விவசாயிக்கு இலவசமாக பசுமாடு, கன்றுகுட்டியை தவெக நிர்வாகிகள் வழங்கி குதுகலப்படுத்தினர்.

இந்நிலையில், தவெக முதல் மாநாட்டிற்கு நிலம் வழங்கிய நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அக்கட்சி தலைவர் விஜய், இன்று விருந்து அளிக்கிறார்.

முன்னதாக இதற்கான ஏற்பாடுகள் பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் வி.சாலை நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் 100க்கணக்கானோர் அவர்கள் குடும்பத்துடன் இந்த விருந்தில் கலந்து கொள்ள பஸ்சில் அழைத்து வரப்பட்டனர். இதற்கான பஸ் ஏற்பாடுகளையும் த.வெ.க. கட்சியினர் செய்திருந்தனர்.

இதனிடையே தவெக தலைவர் விஜய் பனையூருக்கு வர உள்ளநிலையில், இரும்பு தடுப்புகள் கொண்டுவரப்பட்டு, போலீசாரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story