சென்னையில் 16 தொகுதிகளிலும் தவெக முன்னிலை

234 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
சென்னையில் 16 தொகுதிகளிலும் தவெக முன்னிலை
Published on

சென்னை,

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தல் களத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க., பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட் டணி என இருபெரும் அணிகளுடன், தமிழக அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் மற் றும் நாம் தமிழர் கட்சியும் இறங்கின.

இந்த நிலையில் 234 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று (திங்கட்கிழமை) எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டது. ஆரம்பத்தில் திமுக முன்னிலையில் இருந்தது. சிறிது இடைவேளை அடுத்து தவெக முன்னிலையில் பெற்றது. அதிமுக 2-ம் இடத்திலும், திமுக 3-ம் இடத்திலும் இருந்து வருகிறது.

மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி, தவெக - 95 இடங்களிலும், அதிமுக - 73 இடங்களிலும், திமுக - 52 இடங்களிலும் இருந்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். அவர்களை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக, திமுக, நாதக வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

திமுகவின் கோட்டையாக இருந்த வந்த தலைநகர் சென்னையை இந்த சட்டசபை தேர்தலில் தவெக தன்வசப்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com