தவெக அரசு; ஏழை முருக பக்தர்களின் தலையில் பேரிடியை இறக்கியுள்ளது- நயினார் நாகேந்திரன் கண்டனம்

ஆன்மிக தலங்களை வெறும் வருவாய் ஈட்டும் வணிக கூடங்களாக மட்டுமே பார்க்கும் ஜோசப் விஜய் அரசின் போக்கு வெளிப்பட்டுள்ளது.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

ஏழை முருக பக்தர்களின் தலையில் பேரிடியை இறக்கியுள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:- பழனி கோவிலில் கட்டண கொள்ளை- ஜோசப் விஜய் அரசின் ஆன்மிக விரோத போக்கிற்கு கண்டனம்.

அநியாய கட்டண கொள்ளை

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் விடுதிகளின் கட்டணங்களை இன்று முதல் ஜோசப் விஜய் அரசு வரலாறு காணாத வகையில் ரூ. 300 முதல் ரூ. 1,500 வரை உயர்த்தி, அறைகள் இன்றி அவதியுறும் ஏழை முருகப் பக்தர்களின் தலையில் பேரிடியை இறக்கியுள்ளது. முதல்-அமைச்சர் விஜய் அரசின் இந்த அநியாய கட்டண கொள்ளையை பாஜக வன்மையாக கண்டிக்கிறது.

வருவாய் ஈட்டும் வணிக கூடங்கள்

ஆட்சி பொறுப்பேற்றதும் கோவில்களை தங்களின் நேரடி கண்காணிப்பில் வைத்திருப்போம் என வீராப்பு பேசிய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஏழை எளிய முருக பக்தர்களுக்கு வழங்கும் பரிசு இதுதானா? பராமரிப்பு செலவு என்ற வெற்று மழுப்பல் காரணத்தை கூறி, ஆன்மிக தலங்களை வெறும் வருவாய் ஈட்டும் வணிக கூடங்களாக மட்டுமே பார்க்கும் ஜோசப் விஜய் அரசின் போக்கு வெளிப்பட்டுள்ளது.

நடவடிக்கை

எனவே, உயர்த்தப்பட்ட தங்குமிட கட்டணத்தை தவெக அரசு உடனடியாக திரும்ப பெறவதோடு, போதிய தங்குமிட வசதி இல்லாத சூழலை பயன்படுத்தி தனியார் விடுதிகள் நடத்தும் கட்டண கொள்ளையில் இருந்து ஏழை பக்தர்களை பாதுகாக்க தவெக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வலியுறுத்திகேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com