அரசுப் பள்ளி வகுப்பறையில் தவெகவினர் ரீல்ஸ் - அண்ணாமலை விமர்சனம்

தவெகவினரின் செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலையை அவலப்படுத்தும் விதமாக இருக்கின்றன என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20-க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதல்-அமைச்சர் விஜய் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், அரசுப் பள்ளிகளுக்கு சரியான கட்டிடங்கள் கூட இல்லாமல் தரமிழந்து போய்விட்ட நிலையில், தற்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு, அவற்றின் பெருமையை மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி முன்னால் இருக்கிறது. ஆனால், தவெக கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன.

ஆளுங்கட்சியினர் என்பதற்காக, அரசுப் பள்ளிகளில் சென்று, வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை, முதல்-அமைச்சர் விஜய்யே ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று நம்புகிறோம். மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு, தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி முதலமைச்சரையும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com