கன்னியாகுமரியில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத தவெக

குமரி மாவட்ட அரசியல், தமிழக அரசியலில் இருந்து எப்போதுமே வித்தியாசமானதாக இருக்கும்.
கன்னியாகுமரியில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத தவெக
Published on

குமரி,

தேர்தலுக்கு முன்பிருந்தே தமிழக அரசியலில் த.வெ.க. கட்சி யின் வரவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. த.வெ.க. தலைவர் விஜய்யின் அரசியல் பிரவேசமும், அவர் சுற்றுப்பய ணம் செய்த இடங்களில் கூடிய கூட்டமும் இந்த கட்சி யாருக்கு தாக்கத்தை உருவாக்குமோ? என்ற அச்ச உணர்வு அரசியல் கட்சிகளிடையே இருந்தது உண்மைதான்.

இந்தநிலையில்தான் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடந்தது. அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தமிழகம் முழுவதும் த.வெ.க. வேட்பாளர்கள் அதிகமான இடங்களில் முன்னிலையில் இருந்தனர். மாநிலம் முழுவதும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றி அசத்தியது.

ஆனால் குமரி மாவட்ட அரசியல், தமிழக அரசியலில் இருந்து எப்போதுமே வித்தியாசமானதாக இருக்கும். குமரி மாவட்டம் தேசிய கட்சிகளின் ஆதிக்கம் செலுத்தும் மாவட்டமாகவே இருந்து வருகிறது. அப்படிப்பட்ட வித்தியாசமான அரசியல் நேற்றும் குமரி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. தமிழகத்தில் த.வெ.க. 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றிய நிலையில் குமரி மாவட்டத்தில் 6 தொகுதிகளில் ஒரு இடத்தில் கூட த.வெ.க. வெற்றி பெறவில்லை.

அதற்காக இந்த தேர்தலில் த.வெ.க.வை குறைத்தும் மதிப்பிட முடியாது. மாநில கட்சிகள் வெற்றி பெறாத தொகுதிகளான கிள்ளியூர், விளவங்கோடு தொகுதிகளில் கூட பிரதான அரசியல் கட்சியும், தேசிய கட்சியுமான பா.ஜனதாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு முதல் தேர்தலிலேயே 2-வது இடம்பெறும் அளவுக்கு கணிசமான வாக்குகளை த.வெ.க. வேட்பாளர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. ஆனால் குமரியில் ஒரு இடம்கூட கிடைக்காதது த.வெ.க. வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com