மதுரையில் தவெக அரசின் 100-வது நாள் கொண்டாட்டம்: இனிப்பு மழையில் நனைந்த பொதுமக்கள்

பொதுமக்கள் பலரும் தவெகவினரிடம் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
மதுரையில் தவெக அரசின் 100-வது நாள் கொண்டாட்டம்:
தவெக 100-வது நாள்
Published on

மதுரை,

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி தொடங்கப்பட்டு 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் தவெக கட்சியினர் மற்றும் நிர்வாகிகள் திரண்டு வந்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இனிப்பு மழையில் நனைந்தனர் பொதுமக்கள்.

இனிப்பு வழங்கி உற்சாகம்

மதுரையின் முக்கிய சந்திப்புகள் மற்றும் பொது இடங்களில் தவெக நிர்வாகிகள் இன்று ஒன்று கூடினர். விண்ணதிரும் வகையில் பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பொதுமக்களுக்கும், பேருந்து பயணிகள் மற்றும் பாதசாரிகளுக்கும் தவெகவினர் லட்டுகள் மற்றும் இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

மக்கள் பாராட்டு

கட்சியின் கொள்கைகள் மற்றும் மக்கள் நல பணிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களிடம் விநியோகித்தனர். ஊழலற்ற நிர்வாகம், இலவச மின்சாரம் மற்றும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களால் இந்த 100 நாள் ஆட்சி தங்களுக்கு பெரும் பயன் தந்துள்ளதாக பொதுமக்கள் பலரும் தவெகவினரிடம் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த விழா மதுரையில் பரபரப்பையும், தவெக தொண்டர்களிடையே மிகுந்த எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com