சென்னை எழும்பூர் - தென்காசி சிறப்பு ரெயிலில் கூடுதலாக இரண்டு பெட்டிகள் இணைப்பு!

தற்போது பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 2 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.
சென்னை எழும்பூர் - தென்காசி சிறப்பு ரெயிலில் கூடுதலாக இரண்டு பெட்டிகள் இணைப்பு!
கோப்புப்படம்
Published on: 

சென்னை,

பயணிகள் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், சென்னை எழும்பூர் - தென்காசி இடையே இயக்கப்படும் ஒருவழி அதிவிரைவு சிறப்பு ரெயிலில் கூடுதலாக 2 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.

சென்னை எழும்பூர் - தென்காசி

அதன்படி, ரெயில் எண் 06015 சென்னை எழும்பூர் - தென்காசி ஒருவழி அதிவிரைவு சிறப்பு ரெயில், வருகிற 20.11.2026 வெள்ளிக்கிழமை இரவு 11.50 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் சனிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு தென்காசியைச் சென்றடையும். இந்த ரெயில் ஒருமுறை மட்டும் இயக்கப்படுகிறது.

இந்த ரெயிலில் ஏற்கனவே ஒரு ஏசி இரண்டடுக்கு பெட்டி, 3 ஏசி மூன்றடுக்கு பெட்டிகள், 10 படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் மற்றும் 2 சரக்கு பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன.

கூடுதல் பெட்டிகள்

தற்போது பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 2 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இதன் மூலம் பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கை 2-ல் இருந்து 4-ஆக அதிகரிக்கிறது. இந்த கூடுதல் பெட்டிகள் 20.11.2026 முதல் இணைக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

X