கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் என்று கூறி ரூ.40 லட்சம் மோசடி - இருவர் கைது

ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி போலீஸ் கமிஷனரகத்திற்கு உட்பட்ட படூர் பகுதியை சேர்ந்தவர் சுஜாதா நாதன் (50 வயது). இவரது வாட்ஸ்-அப் எண்ணிற்கு வந்த விளம்பரத்தில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டபோது, ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.

Also Read
ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழக அரசு அறிவிப்பு
கோப்புப்படம்

அதை நம்பிய சுஜாதா நாதன் அவர்கள் கூறிய வங்கி கணக்கில் ரூ.40 லட்சத்து 32 ஆயிரத்தை செலுத்தினார். ஆனால் கூறியபடி இரட்டிப்பு தொகை அவரது கணக்கில் வராததால் தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார். இதைத்தொடர்ந்து அவர் அளித்த புகாரின் பேரில் ஆவடி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Also Read
கரூர் மாவட்ட பாமக தலைவர் மகன் வெட்டிக்கொலை: குற்றவாளிகளை கைது செய்யவேண்டும் - ராமதாஸ்
கோப்புப்படம்

விசாரணையில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த மோசடி கும்பலுக்கு 25 சதவீதம் கமிஷன் பெற்று தங்களது வங்கி கணக்குகளை வழங்கி மோசடியில் ஈடுபட்டதாக கோவையை சேர்ந்த அஜய் (37 வயது), ரமேஷ்குமார் (37 வயது) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Also Read
ஓபிசி கிரீமிலேயர் பிரிவினர் நிர்ணயம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
கோப்புப்படம்
X

Daily Thanthi
www.dailythanthi.com