கால் நூற்றாண்டு காலம் தி.மு.க.வை தோளில் சுமக்கவுள்ளார் உதயநிதி - அமைச்சர் சேகர்பாபு

திமுகவையும், மக்கள் நலனையும் உதயநிதி ஸ்டாலின் தோளில் சுமக்கவுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
கால் நூற்றாண்டு காலம் தி.மு.க.வை தோளில் சுமக்கவுள்ளார் உதயநிதி - அமைச்சர் சேகர்பாபு
Published on

சென்னை,

அமைச்சராக இருந்துவரும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. அவர் இன்று மாலை பதவியேற்க உள்ளார். அவருக்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராவது குறித்து அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து இருப்பதாவது;

"அடுத்த கால் நூற்றாண்டு காலம் திமுகவையும், மக்கள் நலனையும் உதயநிதி ஸ்டாலின் தோளில் சுமக்கவுள்ளார். மக்களிடம் செல்லாக்காசாகிவிட்ட பாஜகவின் கூற்றுக்கு செவிசாய்க்க விரும்பவில்லை. தகுதியில்லாத கட்சி என்பதாலேயே பாஜகவிற்கு மக்கள் தோல்வியை பரிசளித்துள்ளனர்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com