பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள இந்த சுமையை குறைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
Published on

சென்னை,

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

ஏழை - எளிய - நடுத்தர வர்க்க மக்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையில் Petrol, Diesel, CNG விலையை மத்திய அரசு உயர்த்தி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த விலை ஏற்றத்தின் மூலம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிட்டு, ‘பொறுத்துக்கொள்ளுங்கள், அதைச் செய்யாதீர்கள், இதைச் செய்யாதீர்கள்’ என்று மத்திய அரசு அறிவுரை கூறுவது, தனது தோல்வியை மறைக்கும் முயற்சியே ஆகும். மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள இந்த சுமையை குறைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com