தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்; பிரசார வாகனம் தயார்

திமுக 164 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.
தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்; பிரசார வாகனம் தயார்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி வெளியாக உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு 70 தொகுதிகளை ஒதுக்கிய திமுக மிதமுள்ள 164 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் விரைவில் பிரசாரத்தை தொடங்க உள்ளார்.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபடும் வாகனம் தயார் நிலையில் உள்ளது. உதயநிதி ஸ்டாலின் பிரசார வாகனத்தில் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com