தங்க சங்கிலியை நேர்மையோடு காவல் துறையிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு உதயநிதி ஸ்டாலின் பாராட்டு

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர் கிளாரா திருவான்மியூரில் பணியின் போது, கீழே கிடந்த ஒரு பவுன் தங்கச்சங்கிலியை கண்டெடுத்திருக்கிறார்.
தங்க சங்கிலியை நேர்மையோடு காவல் துறையிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு உதயநிதி ஸ்டாலின் பாராட்டு
Published on

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர் சகோதரி கிளாரா திருவான்மியூரில் பணியின் போது, கீழே கிடந்த ஒரு பவுன் தங்கச்சங்கிலியை கண்டெடுத்திருக்கிறார். உடனே அதனை காவல் நிலையத்தில் ஒப்படைத்து, உரியவரிடம் சேர்க்கச் சொல்லி, நேர்மையால் உயர்ந்து நிற்கிறார் அவர்!

இத்தூய உள்ளத்துக்குச் சொந்தக்காரரான சகோதரி கிளாரா மற்றும் அவரது குடும்பத்தாரை நேரில் சந்தித்துப் பாராட்டினோம்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி அவருக்குப் புத்தாடையும், திமுக இளைஞர் பிரிவு அறக்கட்டளை சார்பில் நிதியும் வழங்கி வாழ்த்தினோம் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com