கவர்னரிடம் உதயநிதி கோரிக்கை மனு கொடுக்கிறார்; இதுதான் கர்மா - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

அரசியலமைப்பு தினத்திற்கு வாழ்த்து சொல்ல தி.மு.க.விற்கு எந்த உரிமையும் இல்லை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கவர்னரிடம் உதயநிதி கோரிக்கை மனு கொடுக்கிறார்; இதுதான் கர்மா - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
Published on: 

சென்னை,

பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“கள்ளக்குறிச்சி தொகுதிக்கு இடைத்தேர்தல் வர வேண்டும். அவர் சட்டமன்ற உறுப்பினராக தொடர்வதற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. பெண்களுக்கு எதிராக யார் பாலியல் குற்றங்கள் செய்கிறார்களோ, அவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் அந்த பதவியில் இருந்து அவர்கள் நீக்கப்பட வேண்டும்.

இதுதான் கர்மா...

ஆனால், இன்று கவர்னரிடம் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை மனு கொடுக்கிறார். இதுதான் கர்மா. கவர்னர் அழைக்கும் போதெல்லாம் நீங்கள் போகவில்லை. கவர்னர் மாளிகையை எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ அவ்வளவு அவமானப்படுத்தினார்கள்.

அரசியலமைப்பு தினம்

இன்று அரசியலமைப்பு தினத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 1986-ல் அரசியலமைப்பு புத்தகத்தை கொளுத்தியது திராவிட முன்னேற்ற கழகம். எனவே அரசியலமைப்பு தினத்திற்கு வாழ்த்து சொல்ல தி.மு.க.விற்கு எந்த உரிமையும் இல்லை.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X