

உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியில், அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதுதொடர்பாக திருச்சி டோல்வே பிரைவேட் லிமிடெட் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கார், ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஒரு முறை பயணம் செய்வதற்கான கட்டணம் மாற்றமின்றி ரூ.70 ஆகவே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் பலமுறை சென்று வருவதற்கான கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.105 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர பாஸ் கட் டணம் ரூ.2,125 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலகு ரக வணிக வாகனங்களுக்கான ஒரு முறை பயணக் கட்டணம் ரூ.120-ல் இருந்து ரூ.125 ஆகவும், பலமுறை பயணக் கட்டணம் ரூ.180-ல் இருந்து ரூ.185 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.3,715 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் லாரி மற்றும் பேருந்துகளுக்கான ஒரு முறை பயணக் கட்டணம் ரூ.240-ல் இருந்து ரூ.250 ஆக வும், பலமுறை பயணக் கட்டணம் ரூ.355-ல் இருந்து ரூ.370 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.7,435 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பல்வகை அச்சு கொண்ட கனரக வாகனங்களுக்கான ஒரு முறை பய ணக் கட்டணம் ரூ.380-ல் இருந்து ரூ.400 ஆகவும், பலமுறை பயணக் கட் டணம் ரூ.575-ல் இருந்து ரூ.595 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.11,950 ஆகும். மேலும், செப்டம்பர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த கட்டண உயர்வால், வாகன ஓட்டிகள் மற் றும் சரக்கு வாகன உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.