

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உமறுப்புலவர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் மரியாதை செலுத்தினார்.
இஸ்லாமிய தமிழறிஞர் அமுதகவி உமறுப்புலவர் பிறந்த நாள் விழா தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக அரசு சார்பில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் கலந்து கொண்டு உமறுப்புலவரின் நினைவிடத்தில் மலர்ப் போர்வை வைத்து மரியாதை செலுத்தினார்.