அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

விக்கிரவாண்டி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
Published on

விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டியில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை யொட்டி ஊஞ்சல் உற்சவ விழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனுக்கு படையல் போட்டு சிறப்பு வழிபாடு நடத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன்பின்னர் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விக்கிரவாண்டி பருவத ராஜகுலத்தினர் மற்றும் தர்மகர்த்தாக்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்

X

Daily Thanthi
www.dailythanthi.com