பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
Published on

தியாகதுருகம்

தியாகதுருகம் அருகே சித்தலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இ்ங்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி புரட்டாசி மாத அமாவாசையான நேற்று மூலவர் பெரியநாயகி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 21 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் பெரியநாயகி அம்மனை பக்தர்கள் தோளில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்தனர். பின்பு கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது அம்மனுக்கு தாலாட்டுப்பாடி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் தியாகதுருகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com