சென்னையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் - உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு

முகாம் குறித்த பொதுமக்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார்.
சென்னையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் - உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு
Published on

சென்னை,

சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கு தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

மக்களைத் தேடி அரசு சேவைகள் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்டு வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். இன்றைய தினம், சென்னை சோழிங்கநல்லூர் தொகுதி மண்டலம் -15, வார்டு 195, துரைப்பாக்கத்தில் நடைபெற்ற முகாமுக்குச் சென்று அங்கு வழங்கப்படும் சேவைகளை ஆய்வு செய்தோம்.

பொதுமக்களின் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வுகளை வழங்க வேண்டும் என்று முகாமில் இருந்த பணியாளர்களை அறிவுறுத்தினோம். முகாம் குறித்த பொதுமக்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் பெற்றோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com