

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (திங்கட்கிழமை) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் இதற்கான பணி 62 மையங்களில் நடக்கிறது. இந்த மையங்களில் மின்சார வினியோகம் தடை யில்லாமல் வினியோகம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரிய தலைவர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் கோடை காலத்தை முன்னிட்டு, தினசரி மின்சார தேவை இதுவரை இல்லாத அளவாக சுமார் 23 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. ஆனால், மின்சார நுகர்வு சராசரியாக 21 ஆயிரம் மெகாவாட் வரை சென்றுள்ளது. அதே சமயம் குறைந்தபட்ச தேவையே 18 ஆயிரம் மெகா வாட்டாக உள்ளது.
இந்த உச்சக்கட்ட தேவைக்கு முக்கிய காரணம் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுகிறது. குறிப்பாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தில் மின்சார வெட்டு இருக்காது. தேவையான மின்சாரம் உற்பத்தி மற்றும் கொள்முதல் செய் யப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.