மல்யுத்த வீராங்கனைகள் விவகாரத்தில் கோர்ட்டுதான் முடிவெடுக்கும் - மத்திய மந்திரி அனுராக் தாக்குர்

எதிர்கட்சியினர் இந்தியாவை பிரிக்க முயல்வதாக மந்திரி அனுராக் குற்றம்சாட்டினார்.
மல்யுத்த வீராங்கனைகள் விவகாரத்தில் கோர்ட்டுதான் முடிவெடுக்கும் - மத்திய மந்திரி அனுராக் தாக்குர்
Published on

சென்னை,

சென்னை மீனம்பாக்கத்தில் மத்திய அரசின் திட்டங்களை விளக்கும் ஊர்திகளை மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மல்யுத்த வீராங்கனைகள் விவகாரம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளது என்றும், அது தொடர்பாக கோர்ட்டுதான் முடிவெடுக்கும், யாரும் அதில் தலையிட முடியாது என்றும் கூறினார். மேலும் எதிர்கட்சியினர் இந்தியாவை பிரிக்க முயல்வதாக அவர் குற்றம்சாட்டினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com